Map Graph

தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வள நிறுவனம்

தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வள நிறுவனம் இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள அரசுசார் நிறுவனம் ஆகும். இது இந்தியாவில் 2002-ல் நிறுவப்பட்ட தகவல் அறிவியல் தொடர்பான நிறுவனம் ஆகும். 2021ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஆனது. இது இந்தியாவில் உள்ள 38 ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்குகிறது. இந்நிறுவனம் அறிவியல் தொடர்பான பல ஆய்வு இதழ்கள் மற்றும் இதழ்களை வெளியிடுகிறது.

Read article